
அண்டங்கள் ஈரேழும் ஆதியாய் இருந்து
ஆதிசிவன் தேவியாய் அருள்மழை பொழிந்து
கண்டங்கள் கடலேழு ஆறுகள் கடந்து
கற்கோவில் மலைக்கோவில் குகைக்கோவில் கொண்டு
களுமுந்தன் வெளி உறையும் மாரியம்மன்
புகழை சந்தமுடன் செந்தமிழால் பாட
அடியேனும் வேண்டினேன் உன் திருவடியை
சங்கடங்கள் தீர்க்கும் வலம்புரியான் துணையே
மாரியம்மா, அருள்மழை பொழி
மாரியம்மா, நோய் வினை அகற்று
மாரியம்மா, உயிர்க்கும் தாயே
மாரியம்மா, எங்கள் காப்பே
ஆணவம் கொண்டோரின் ஆணவம் அகற்றியே
ஆலமரம் கீழிருந்து அருள்மழை பொழிந்து
பொல்லாத கோதாரி வெம்மை நோய் தீர்க்கும்
புவியிலே மானிடர்கள் தெய்வமும் ஆனாய்
கொட்டும் கண்ணீர் துடைத்துக் காத்தருள்வாய்
கொடுமைகள் எல்லாம் கரைந்து போகவே
உன் நாமம் சொல்லும் நாவில் தேன் பெருகும்
உன் கரம் பட்டால் இருள் விலகுமே
மாரியம்மா, அருள்மழை பொழி
மாரியம்மா, நோய் வினை அகற்று
மாரியம்மா, உயிர்க்கும் தாயே
மாரியம்மா, எங்கள் காப்பே
மும்மாரி பொழிய வேண்டி நிற்கிறோம்
முன் வந்து நின்று முகம் காட்டு அம்மா
கல் மனம் கரைந்து கனிவாய் மாற
காத்திடு எங்களை கருணைத் தெய்வமே
மாரியம்மா, அருள்மழை பொழி
மாரியம்மா, நோய் வினை அகற்று
மாரியம்மா, உயிர்க்கும் தாயே
மாரியம்மா, எங்கள் காப்பே