
பூமிக்கு வந்த நாள் இது - நம்
பூந்தளிர் மெய்யாழினி நாள் இது!
வானவில் வண்ணங்கள் கூடும் நாள் - உன்
வாழ்வினில் இன்பங்கள் சூடும் நாள்!
கண்ணில் சிரிப்பு, கன்னத்தில் பூரிப்பு,
கற்பகத் தருப்போல் நீ வாழ்கவே!
பொன்னான செல்வி நீ வளர்கவே - என்றும்
புன்னகை முகத்துடன் வெல்கவே!
பூமிக்கு வந்த நாள் இது - நம்
பூந்தளிர் மெய்யாழினி நாள் இது!
வானவில் வண்ணங்கள் கூடும் நாள் - உன்
வாழ்வினில் இன்பங்கள் சூடும் நாள்!